சென்னை, அக். 15 –
ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 15 அறிவிக்கப்பட்டு 9 மாவட்டங்களுக்கான சாதரண தேர்தல் அக் 6 மற்றும் 9 தேதிகளில் இருக் கட்டமாகவும், மற்றும் மற்ற 28 மாவட்ங்களுக்கு அக் 9 ல் ஒரேக் கட்டமாகவும் தமிழகம் முழுவதும் அமைதியாக நடைப் பெற்றது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான தேர்தலில், அதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 153 பதவிகளுக்கான, அனைத்து மாவட்டங்களில் நடந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 153 இடங்களில் திமுகவின் வேட்பாளர்கள் 139 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளை பிடித்து, அபார வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 9 இடங்களிலும் மதிமுக 2 இடங்களிலும், விசிக 1 இடத்திலும் வெற்றிப் பெற்றுள்ளன. மேலும் 2 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிவுள்ளனர்.
இந்நிலையில் எதிர்கட்சி அந்தஸ்தில் இருக்கும் அதிமுக 2 இடத்திலும் மற்ற எதிர் கட்சிகளான அமமுக, பா.ஜ.க, பா.ம.க, நாமக, மற்றும் ம.நீ.மய்யம் போன்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது அரசியல் திறனாய்வாளர்கள், விமர்சர்கள் மற்றும் கருத்தாளர்கள், பார்வையாளர்கள் என எல்லோரிடத்திலும் வியப்பை ஏற்படுத்திவுள்ளது.
ஏறக்குறைய அனைத்து இடங்களையும் அதிமுக பெற்ற 2 இடத்தை தவிர்த்து அனைத்து இடங்களையும் திமுக கூட்டணி பிடித்து ஊரக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இந்த வெற்றியின் மூலம் புதிய சாதனைப் படைத்துள்ளது என்றே சொல்லலாம். அப்படி ஒரு மகாத்தான வெற்றியாகும். இதனால் அதிமுக கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியையும் சோர்வையும் உண்டாக்கிவுள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.