ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சீனாங்குடி மற்று துத்தியேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்ப்ட விவசாய பாசனதாரர் நலசங்க பிரதிநிதிகள் மூலு் மேற்கொள்ளப்பட்டு வரும் க்மாயய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தி்ல ரூ.37.59 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்வைகை வடிநில கோட்டம், பரமக்குடியின் கட்டுப்பாட்டில் பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் முதுகுளத்துார் வட்டங்களி்ல் உள்ள 41 கண்மாய்களிலும் குண்டாறு வடிநில கோட்டம், மதுரையின் கட்டுப்பாட்டில்முதுகுளத்துார் கடலாடி மற்றும் கமுதி வட்டங்களில் உள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்குட்பட்ட சீனாங்குடி கிராமம், முள்ளிக்குடி கண்மாயில் ரூ.57.75 லட்சம் மதிப்பில் துத்தியேந்தல் கிராமம் மங்கல் கண்மாயில் ரூ.79.25 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளானது சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்க்பட்டிற்குட்பட்ட விவசாய பாசனதாரர்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ள விவசாய பாசனதாரர் சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி மேற்குறிப்பிட்டுள்ள கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று குடிமராமத்து திட்டப்பணிகளை ஆய்வு செய்ததோடு, விவசாய பாசதனதாரர் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கினார். குறிப்பாக குடிமராமத்து திட்டத்தி்ன கீழ் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் எனவும், பணிகளின் முன்னேற்றம் மற்றும் செலவினம் குறித்து .உரிய கால இடைவெளியில் பாசனதாரர் சங்க பிரதிநிதிகள் கிராம பொது மக்கள் ஒருங்கிணந்து கூட்டம் நடத்தி வெளிப்படை தன்மையினை உறுதி செய்திட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வைகை வடிநில கோட்டம்) பாபு, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சாந்தி . வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பொது மக்கள் உடனிருந்தனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைப்பெறும் கண்மாய் குடிமராமத்து பணிகள்-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரடியாக சென்று...