திருவண்ணாமலை ஜூலை.25-

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.07.2022), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- ஐ.ஏ பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் வி.டி.எஸ்.ஜெயின் மேனிலைப்பள்ளி  தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் உள்ள 69 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 17560, வருகை புரியாதவர்கள் 3,220 ஆரணியில் உள்ள 11 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 11210 வருகை புரியாதவர்கள் 1675,  செங்கத்தில் உள்ள 11 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 5282, வருகை புரியாதவர்கள் 814  சேத்பட்டில் உள்ள 10 மையங்களில் வருகை புரிந்;தவர்கள் 2893, வருகை புரியாதவர்கள் 322 செய்யாறில் உள்ள 24 மையங்களில்  வருகை புரிந்தவர்கள் 6193 வருகை புரியாதவர்கள் 790  ஜமுனாமரத்தூரில் உள்ள 03 மையங்களில் வருகை புரிந்தவர்கள் 975 வருகை புரியாதவர்கள் 83  கலசபாக்கத்தில் உள்ள 10 மையங்களில்  வருகை புரிந்;தவர்கள் 2951 வருகை புரியாதவர்கள் 359  கீழ்பென்னாத்தூரில் உள்ள 11 மையங்களில்  வருகை புரிந்;தவர்கள் 2525 வருகை புரியாதவர்கள் 424 போளுரில் உள்ள 25 மையங்களில்  வருகை புரிந்;தவர்கள் 5863, வருகை புரியாதவர்கள் 671 தண்டராம்பட்டில் உள்ள 14 மையங்களில்  வருகை புரிந்தவர்கள் 3330, வருகை புரியாதவர்கள் 496 வந்தவாசியில் உள்ள 22 மையங்களில்  வருகை புரிந்தவர்கள் 5818 வருகை புரியாதவர்கள் 704 மற்றும் வெம்பாக்கத்தில் உள்ள 8 மையங்களில் வருகை புரிந்;தவர்கள் 1802 வருகை புரியாதவர்கள் 169 என மொத்தம்  12 தேர்வு மையங்களில் 174 பள்ளிகள், 85 கல்லூரிகள் ஆக மொத்தம் 259 தேர்வு கூடங்களில் தேர்வு எழுத மொத்தம் 66,408 தேர்வர்கள் மட்டும் வருகை புரிந்துள்ளனர்,  வருகை புரியாதவர்களின் எண்ணிக்கை 9,727 ஆகும். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வு மையங்களில் தேர்வின் போது முறைகேடு நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க 34 பறக்கும் படைகளும், 53 மொபைல் யூனிட் அலுவலர்கள் மற்றும் 259 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

மேலும், மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேர்வு பணிகள் அனைத்தும் 272 வீடியோ கிராப்பர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், வட்டாட்சியர் எஸ்.சுரேஷ் மற்றும் தேர்வு மைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here