திண்டுக்கல், டிச. 19 –
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற முறையிலும், அதனை முறையாக பல ஆண்டுகளாக பராபரிப்பு இல்லாமலும் உள்ளதாக அவ்வூர் கல்வியாளர்கள் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்பள்ளிக்கு இரவு நேர மற்றும் பகல் நேர வாட்ச்மேன்கள் ( காவலாளிகள் ) யாரும் இல்லாதது போல் உள்ளது. அதனால் அப்பள்ளியின் நுழைவு வாயில் கதவுகள் எப்போதும் திறந்தே பாதுகாப்பற நிலை உள்ளது. இதனால் வளாகத்திற்கு உட்புறம் யார் வேண்டுமானலும் கேட்பார் ஆளில்லாமல் நுழையும் வாய்ப்புக்கள் உள்ளது. இந்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு குடிகாரர்கள் அதனை தங்கள் இரவு நேர கூடாரமாக பயன்படுத்திக் கொண்டு பள்ளிக் கட்டடத்தின் மீதும் பள்ளி அலுவலக மாடிகள் மீதமர்ந்தும் மது அருந்தி விட்டு அதற்கு பயன்படுத்திய மதுப்பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்பளர்கள் என அனைத்தையும் அங்கயே விட்டுச் சென்று பள்ளி வளாகத்தையே குப்பை மேடுகளாக மாற்றும் அவல நிலை உள்ளது.
மேலும் அதனால் பகல் நேரங்களில் பள்ளியின் வகுப்பறையில் கல்விக்கற்கும் மாணாக்கர்களுக்கு மது நெடிகள் மற்றும் அவர்கள் போதையில் அப்பகுதியில் அசுத்தம் செய்து சென்ற உடல் உபாதை கழிப்புக்களால் மிகவும் சிரமத்தை எதிர் கொண்டு கல்வி பயிலும் நிலை உள்ளது.
மேலும் இது மேல்நிலைப்பள்ளி என்பதால் இங்கு படிக்கும் மாணவர்கள் குடிகாரர்கள் செய்யும் இச்செயலால் இந்த குற்ற நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு நாளை கல்வியில் மேன்மையாடைய வேண்டிய மாணாக்கர்கள் வழிப்பாதை மாறுவதற்கான சூழல் ஏற்படலாம் என அப்பகுதி கல்வியாளர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தங்கள் கவலையுடனான புகாரை வெளிப்படுத்துகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அப்பள்ளியில் நேரடி ஆய்வு நடத்தி பள்ளிக் கட்டட சீரமைப்புப் பணி மற்றும் பாதுகாப்பு குறித்த காவலாளி பணியமர்த்தல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு எதிர்வரும் விபரீதங்களை தடுக்கும் வண்ணம் அரசு செயல்பட அவர்கள் தங்கள் கோரிக்கைகள் வாயிலாக வலியுறுத்துகிறார்கள்..