திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தனூர் அணையில் புதிய ஷெட்டர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்குவதற்காக 102 குடியிருப்புகள், படகு குளம் சிறுவர் பூங்கா, அறிவியல் பூங்கா, புதிய கழிவறை மற்றும் காத்திருப்போர் கூடம் ஆகிய பணிகள் ரூ.90 கோடியில் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சாம்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.