கும்பகோணம், ஆக. 10 –
திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க தேவைக்கேற்ப பெண் மருத்துவர் பணிநியமனம் செய்ய வேண்டும். மகப்பேறு வார்டை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு குழந்தை மருத்துவர் நியமனம் செய்திட வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்களை செயல்படுத்தி மக்கள் நலன் காத்திட வேண்டும், திருவிடைமருதூர் தாலுகா தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும், நோயாளிகளுக்கு வழங்கும் மருந்துகளை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)) மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.