கும்பகோணம், அக். 06 –
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தொடர்ந்து மாணவர்களை சாதிய ரீதியாக ஒருமையில் பேசி வருவதாகவும் மேலும் மாணவர்களிடையே சாதீய ரீதியான பிற்போக்கு எண்ணத்தை விதைத்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னத்தை தமிழக அரசு நிறுவுவதற்கு தனது எதிர் கருத்தை தெரிவிப்து போல் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து மணவர்களிடையே விசமத் தனத்தை ஏற்படுத்தி வருவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அக்கல்லூரியில் பணிப்புரிந்து வரும் உதவிப்பேராசிரியர் மீது மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.. மேலும் அவர் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பாக கோரிக்கை மற்றும் கன்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
167 ஆண்டுகள் தொன்மையான இக்கல்லூரியில் மொத்தம் 17 துறைகள் உள்ளது. கல்லூரியில் புவியியல் துறை சார்ந்த மாணவர்களை தொடர்ந்து சாதிய ரீதியாக ஒருமையில் பேசி வரும் உதவி பேராசிரியர் வடிவேல் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மணிகண்டன் தலைமையில் கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கோரிக்கை மற்றும் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.