மீஞ்சூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத்தின் 2 வது வார்டான அரியன் வாயல் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை சார்பில் மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அதில் 5 வயது முதல் 13 வயது வரையிலான சிறுவர் சிறுமியர்களுக்கான ஒட்ட பந்தயப் போட்டி, மிதிவண்டி போட்டி, சாக்குப்போட்டி, லெமன்ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகளை துவக்கி வைத்தார்.
மேலும் அப்போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த இளைஞர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அந் நிகழ்வில் மீஞ்சூர் பேரூர் திமுக நகர செயலாளர் தமிழ்உதயன், முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், பேரூராட்சி துணை தலைவர் அலெக்சாண்டர், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் மணவாளன், வார்டு உறுப்பினர் அபுபக்கர், மீஞ்சூர் நகர காங்கிரஸ் தலைவர் அரவிந்தன், மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு தலைவர் ராஜேந்திரன், கிளை செயலாளர் அனீஸ், காங்கிரஸ் நிர்வாகி அப்துல், மஜித், அன்சாரி, புஷ்பராஜ், சமூக ஆர்வலர் குருசாலமோன், காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் சாதிக்பாஷா, பஷிர், சாதிக், காஜா, ஃபாரூக், சாகுல், அப்துல்லா, பாபுலால், அப்துல்சமத், ஹிதாயத்துல்லா, அசார், கறிம், முன்னா ஹபிப் சைய்யது அலி அப்துல் பத்தாஹ், தமிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.























