திருவாரூர், நவ. 30 –

திருவாரூர் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், நகர செயலாளர் எம்.தர்மலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், சிஐடியு மாவட்டத் தலைவர் என்.அனிபா, தமுஎகச மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட ஒன்றிய நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் திருவாரூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனுவை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வழங்கினார்கள்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here