உத்திரமேரூர், டிச. 31-
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 662 மகளிர் சுய உதவி குழுக்களின் ரூ.25.18 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நடைப்பெற்றது.
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேளாளர் முரளி, உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 662 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 6966 பயனாளிகளுக்கு ரூ-25.18 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். மேலும், இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.