பொன்னேரி, ஏப். 01 –
கடப்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கியது ஆண்டார்மடம் கிராமம் இங்கு கடந்த ஐந்து தினங்களாக குடிதண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்த பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் இன்று ஆண்டார்மடம் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று மக்களை அணுகி குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் ரவி ஆகியோர்களை அழைத்து குடிநீர் பிரச்சினைக்கு உண்டான ஏற்பாடுகளை செய்து முடித்து கொடுத்தார். எம்.எல்.ஏ யின் இந்த துரித நடவடிக்கைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்.























