மயிலாடுதுறை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழக அரசை கண்டித்து வருவாய் துறை ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே துவக்கினார்கள். இரவு நேரத்தில் அலுவலகத்திலேயே சமையல் செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சரண் விடுப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம், மற்றும் தர்ணா போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இரவு பகலாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். தொடர்ந்து இரவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே அடுப்பு வைத்து சமையல் செய்தனர். சமையல் செய்யும்போதே தமிழக அரசுக்கு எதிராக கண்டன கண்டன கோஷங்களை எழுப்பினர்.