திருவண்ணாமலை, ஆக.8-

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியந்தல் ஊராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 75வது சுதந்திர தினவிழாவையட்டி கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் இரா.முருகன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் முன்னிலை வகிக்க, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டி.கே.லட்சுமி நரசிம்மன், 75வது சுதந்திர தினவிழாவையட்டி நடைபெற்ற விழிப்புணர்வு கிராமிய கலைநிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசுகையில்
 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த பெருவிழாவை மிகசிறப்பாக பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தேசியகீதம் பாடி கொண்டாடிட நமது பாரத பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் இந்த சுதந்திரம் நமக்கு எப்படி நமக்கு கிடைத்தது என்பதை எண்ணிப் பார்க்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம் சும்மா கிடைத்த தில்லை இந்த சுதந்திரம் இதற்காக பல சுதந்திர தியாகிகள் ரத்தம் சிந்தியிருக்கின்றனர் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர் அவர்கள் அனைவரையும், நாம் இந்த நேரத்தில் நன்றி யோடு நினைத்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கிறோம்.

அவர்களின் தியாகத்தால் நமக்கு சுதந்திரம் மட்டுமல்ல பல்வேறு உரிமைகளும் அதிகாரங்களும் கிடைத்துள்ளது. மூன்றடுக்கு ஊராட்சிகள் அதன் மூலம் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் சலுகைகள் மற்றும் அதிகார பரவல்கள் இவையெல்லாம் நமக்கு கிடைத்திருக்கிறது.

ஊராட்சியின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் மக்களாகிய நமக்கே வழங்கப் பட்டிருக்கிறது. சுதந்திரத்தினால் நமக்கு பேச்சுரிமை எழுத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகள் வழங்கப் பட்டிருக்கிறது. இவைகளை பெற்றுத் தந்த நமது முன்னோர்கள் மகாத்மாக காந்தியடிகள் அண்ணல் அம்பேத்கர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற எண்ணற்ற தியாகிகளை நினைவுக் கூர்ந்து நமது மரியாதையை செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம்.

இவர்களால்தான் நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். இந்த 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் தயாரிப்பினை மத்திய அரசு மாநில அரசின் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் வழி காட்டுதலின்படி சிறப்பாக நடத்தி வருகிறது. கொரோனா காலமாக இருந்தாலும் கூட இது போன்ற விழாக்கள் மக்கள் மறந்து விடாமல் இருக்கவும் இவற்றை கொண்டாடி நாட்டு மக்கள் நல்வாழ்வு சிறக்க தொடர்ந்து உறுதிப் பூண்டு அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு தேசத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும், இது போன்ற விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

என அரசு விரும்புகிறது. கொரோனா காலத்திலும் பாதுகாப்பு விதி முறைகளை பின் பற்றி நம்மாலான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க அரசு வலியுறுத்துகிறது. இந்திய ஜனநாயகத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள இந்த விழா இங்கே கொண்டாடப்படுகிறது.

 எனவே கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனாவிலிருந்து மீள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட கிராம பொதுமக்கள் , மகளிர் சுய உதவிக்குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர். 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட வளமைய அலுவலர் ஜெ.ஏசுதாஸ் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுதந்திர தினவிழாவையட்டி தேசியகீதம் பாடப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here