முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பத்திரிகை செய்தி. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இன்று (22/07/2019) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும் என்று கூறிய நமது இஸ்ரோ தலைவர் திரு. சிவன் அவர்கள், இனி, இந்திய தேசியக்கொடி விண்வெளி அரங்கில் பட்டொளி வீசி பறக்கும். இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் சல்யூட் செலுத்தவேண்டியது தனது கடமை என்று பேசியிருப்பதை கேட்க்கும் பொழுது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள தக்கது.
சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயலால் இந்தியா உலக அரங்கில் நிமிர்த்து நிற்பதுடன், ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
செய்திகள் தமிழ்நாடு தென்மண்டல தலைமைச் செய்தியாளர் இ.சிவசங்கரன்