பொன்னேரி, மார்ச். 29 –
சோழவரம் அருகே பண்டிகாவனூர் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து, பயிரிடப்பட்டிருந்த 3 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம். ஆரணி குறுவட்டம். சோழவரம் அடுத்த பண்டிகாவனூர் ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கரை அருகே நீர்நிலைகளை தனியார்கள் சிலர் ஆக்கிரமித்து அதில் பல்வேறு வகையான வேளாண் பயிர்களை பயிரிட்டுயிருந்தனர்.
இதுக் குறித்து பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்துக்கு நில அளவர்கள் மூலம் தெரியவரவே நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டவர். உண்மை நிலவரங்களை கண்டறிந்து அப்பகுதியில் சுமார் 53 ஏக்கர் நிலங்களை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். இதனையடுத்து ஆக்கிரமிப்பில் வேளாண் பயிர்களை 2 ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் அகற்ற முற்பட்ட போது, அங்கு வந்த கிராமத்தினர் தாங்கள் சாகுபடி செய்துதிருக்கின்ற பயிர் இனவகைகளை குறித்து கால அவகாசம் வேண்டி அவரிடம் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலக்கெடு வழங்கி பயிர் வகைகளை சேதப்படுத்தாமல் பொன்னேரி வட்டாட்சியிர் தலைமையிலான வருவாய் துறை அலுவலர்கள் திரும்பினார்கள்.
மேலும் அளவிடும் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் அதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அப்பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மதிப்பு 3 கோடிக்கு மேல் இருக்கும் என வருவாய் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.























