செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்த லீனா பெர்ணான்டஸ் என்ற பெண்மணியின் வீட்டை பா.ஜ.கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவ அரவிந்த் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். என்று லீனா பெர்ணான்டஸ் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து அவரை நீலங்கரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு, செப் . 22 –

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்தவர் லீனா பெர்ணான்டஸ் வயது 55 , இவருக்கு சொந்தமான வீடொன்று திருவான்மீயூர் கண்ணப்பன் நகர் விரிவாக்க பகுதியில் உள்ளது. அவ்வீட்டை கடந்த 2018ம் ஆண்டு பாஜக வின் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் சிவ அரவிந்த் என்பவருக்கு ரூ. 2 இலட்சம் முன் தொகையை பெற்றுக்கொண்டு மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகை எனப் பேசி வாடகை ஒப்பந்த பத்திரம் போட்டு அவரிடம் வீட்டை ஒப்படைத்து விட்டு தனது கணவரின் மருத்துவ சிகிச்சைக்காக வெளி நாடு சென்று திரும்பிவுள்ளார்.

இதனிடையே வழக்கறிஞர் சிவ அரவிந்த் 4 மாதங்கள் மட்டுமே வாடைகை தந்ததாகவும் 11 மாதங்கள் வாடகை தராமலும் தொலைப்பேசியில் பலமுறை அழைத்தும் பதில் ஏதும் அளிக்காமலும் இருந்த நிலையில் நேரடியாக அவர் வாடகைக்கு விட்டிருந்த வீட்டிற்கு நேரில் சென்று சிவ அரவிந்த்தை சந்திக்க சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அவர் இல்லை என்பதை அறிந்து அங்கிருந்தவரிடம் விசாரித்த போது அவர் வழக்கறிஞர் சிவ அரவிந்த் தன்னிடம் 17 இலட்சம் பெற்றுக்கொண்டு குத்தகைக்கு வீட்டை விட்டுள்ளார். என்ற தகவலை தெரிவித்துள்ளார்

பின்னர் சிவ அரவிந்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லீனா பெர்ணாடஸ் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கினர்.

விசாரணையில் வாடகைக்கு விட்ட வீட்டை உரிமையாளர்க்கு தெரியாமல் பாஜகவை சேர்ந்த சிவ அரவிந்த் என்பவர் வேறு ஒருவர்க்கு குத்தகைக்கு விட்டதும், வீட்டை அபகரிக்க நினைத்ததும், உரிமையாளர்க்கு கொலை மிரட்டல் விட்டதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் சிவ அரவிந்த் மீது 420, 294(b),  506(!) Ipc பிரிவுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here