பொன்னேரி, பிப். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கி இருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம்  மீஞ்சூரில்.ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை.சந்திரசேகர் தலைமையில் அக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் எதிர்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரித்தறையின் மூலம் ஒன்றிய பாசிச பாஜக அரசு இதுபோன்ற செயல்களை செய்து வருவதாக சாடினர்.

மேலும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை ஏஜென்சிகளை கொண்டு எதிர்கட்சிகளை முடக்க முயற்சிப்பதற்கும் அப்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் அரவிந்தன், புருஷோத்தமன், சந்திரசேகர், ஜெலேந்திரன்,ஜெயபிரகாஷ்,,நந்தா, திருப்பாலைவனம் வினோத், பழவை ஜெயசீலன், ராஜேந்திரன்,அன்பரசு,சிவக்குமார்,பரசுராமன், கும்மிடிப்பூண்டி பாபு, தேவம்பட்டு உமாபதி ராஜு, சுரேஷ், அத்திப்பட்டு சரவணன், பொன்னேரி ஜெய்சங்கர் உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here