பூவிருந்தவல்லி, ஏப். 19 –
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சியில் உள்ள கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் நாராயணன், மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
மேலும் இக்கூட்டத்தில் பூவிருந்தவல்லி நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்ததற்கும், மேலும் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அதனைத் தொடர்ந்து இக்கூட்டம் தொடங்கப்பட்ட ஐந்தாவது நிமிடத்திலேயே நகராட்சிக்குட்பட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து எவ்வித விவாதமின்றி முடிவுற்றது.





















