திருவள்ளூர், மே. 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி அண்ணா சிலை அருகில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்குதல் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரி நகர அதிமுகச் செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற அவ்விழாவில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரி, நீர் மோர், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் பொன் ராஜா, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் நாலூர் முத்துக்குமார், பொன்னேரி நகர் மன்ற துணைத் தலைவர் சின்னகாவணம் வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உபயதுல்லா, பா.சங்கர், வெற்றிவேல் ராமலிங்கம், கிருஷ்ணாபுரம் வினோத், ஸ்ரீதர், பொன்னேரியார் யுவராஜ், ஏலியம்பேடு சிவா, ஆர்.எஸ்.ரோடு ரவி, மெதூர் ரமேஷ், எம்.டி.சி. இரவி, மெதூரார் சூர்ய குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here