திருவள்ளூர், ஏப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம், குடிசை மாற்று வாரியத்தின் தலைமை பொறியாளரின் பிறந்தநாளை மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டியும் அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

பழைய திருப்பாச்சூர் அருகே உள்ள மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் திருவள்ளுவர் மாவட்டம் குடிசை மாற்று வாரியத்தின் தலைமை பொறியாளர் இளம்பரிதி தனது 58,வது பிறந்தநாள் விழாவை அப்பகுதி மக்களோடு இணைந்து கேக் வெட்டியும் அவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவினை பரிமாறியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

மேலும் இந்நிகழ்வில் பேசிய பொறியாளர் இளம்பரிதி கூறுகையில் இந்தப் பிறந்த நாளை உங்கள் மத்தியில் கொண்டாடுவதை நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன். எனவும் மேலும் குடிசை வீட்டில் வாழும் உங்களுக்கு விரைவில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அரசு வழங்கும் காங்கிரட் வீட்டினை கட்டி தருவதாக அப்போது அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பாச்சூர் ஊராட்சியை சார்ந்த திமுக இளைஞரணி பொறுப்பாளர் லிங்கேஸ்வரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வசந்த் குமார், நாகராஜ், தமிழன், புல்லரம்பாக்கம் கவியரசன், ஒளி தாஸ், இளவரசன், சந்தோஷ் குமார், பாரதி, ரஞ்சித், ஆகியோர் கேக் வெட்டி  மிக சிறப்பான முறையில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here