ஆவடி, மார்ச். 08 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அருசுவை வழங்கி சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆவடி மாநகராட்சிப் பள்ளியில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்துக்கொண்ட அனைவரையும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ் வரவேற்று உரையாற்றினார். பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகைப்புரிந்த ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ஜாஃபர் தேசிய பெண்கள் தினம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி, பூந்தமல்லி நகர்மன்ற உறுப்பினர் நேகராஜ், அன்பு எத்திராஜ் மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குப்புராஜ் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
பின்னர் நடைப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.



















