சென்னை, டிச. 12 –

சோட்டு இண்டேனின் முதலாமாண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கிரிக்கெட் வீரர் பத்ம பூஷன் சுனில் கவாஸ்கர் கலந்துக் கொண்டார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 கிலோ ஃப்ரீ ட்ரேட் LPG, கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது அது 58.5% வளர்ச்சியை தற்போதுக் கண்டுள்ளது என்பது குறிப்பிட தக்கதாகும்.

இந்நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் தலைவர்  S.M. வைத்யா மற்றும் இயக்குநர் (மார்க்கெட்டிங்) V. சதீஷ் குமார்  ஆகிய இருவரும் முன்னிலை வகித்தனர். நிறுவனத்தலைவர் வைத்யாவால் கடந்த ஆண்டு டிசம்பரில் சோட்டு என்று பெயரிடப்பட்டது, இன்று நாட்டின் மிகவும் பிரபலமான LPG பிராண்ட்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு, பிராண்ட் பெயர் மாற்றியமைக்கப்பட்ட சமயத்திலிருந்து சோட்டு சிலிண்டர் அபரிமிதமான வளர்ச்சியைக் (58.5%) கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிறுவனமானது, நாடெங்கிலும் ஒவ்வொரு மாதமும் 2 இலட்சம் ஃப்ரீ ட்ரேட் LPG சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது.

சோட்டுவின் முதல் ஆண்டு நிறைவில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட சுனில் கவாஸ்கர் வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டின் மதிப்புமிக்க இன்றியமையாத ஒன்றாக சோட்டு பரிமாணம் பெறும் என்று குறிப்பிட்டார்.

கொண்டாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய தலைவர் வைத்யா மக்களின் பெரும் அபிமானத்தைப் பெற்ற, லிட்டில் மாஸ்டர் என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் லெஜண்ட் திரு சுனில் கவாஸ்கர்ஜி, இன்று மும்பையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் லிட்டில் மாஸ்டர் சோட்டு இண்டேனுடைய முதல் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது எங்களுக்குப் பெருமையைத் தந்துள்ளது. என்றும் இந்திய சமையலறையில்,இண்டேன் சௌகரியம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் சின்னமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு சுனில் கவாஸ்கர்க்கு நன்றி கூறிய சதீஷ் குமார் அவர்கள், இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக சுனில் கவாஸ்கர் விளங்கியது போலவே, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சோட்டு, இந்திய சமையலறைகளில் செயல்படும் என்று குறிப்பிட்டார்.

சோட்டு இண்டேன் LPG நாடெங்கிலும் 20,000க்கு மேற்பட்ட இடங்களில் இன்று கிடைக்கிறது. கிரானா ஸ்டோர்ஸ், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் இந்தியன் ஆயில் விற்பனையகங்கள், LPG விநியோகஸ்தர் ஆகிய பாயின்ட் ஆஃப் சேல்ஸ் இடங்களிலிருந்து, சோட்டு பயன் படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாளச் சான்றை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இது கையாள்வதற்கு எளிதானது. எடுத்துச் செல்வது பாதுகாப்பானது. மேலும் BIS வரையறைகளை நிறைவு செய்கிறது என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here