ஆவடி, டிச. 12 –
ஆவடி மாநகராட்சியில் கொரோனா காலம் முதல் இன்றுவரை 72 கோரோனா விழிப்புணர்வுக் குறித்த பாடல்களை எழுதி பாடிய சுகாதார ஆய்வாளருக்கு குலோப் ஆல் அச்சீவர்ஸ் கவுன்சில் குழுமம் சார்பில் கோவிட் -19 ஹீரோ விருது வழங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றி வரும் சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர் கொரோனா தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை பொதுமக்களுக்காக அவரே எழுதி 72 க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பாடல்கள் பாடி மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
குறிப்பாக திரைப்பட பாடல் இசைவடிவில் கொரானா விழிப்புணர்வு பாடல்கள் அதிக அளவில் பாடியதால் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார் . இன்று பாண்டிச்சேரி லீ பார்க் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர் மற்றும் மருத்துவ அலுவலர் ஹசீன் முஹம்மது ஆகியோருக்கு கோவிட் 19 ஹீரோ அவார்டு என்ற விருதினை குலோப் ஆல் அச்சீவர்ஸ் கவுன்சில் குழுமம் வழங்கி அவர்களை கௌரவித்தது.
இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி, நடிகர் செந்தில், நடிகை அனு, திரைப்பட பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்கள். பின்னர் ஆவடி மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாபர் அவர்களை வெகுவிமர்சையாக பாராட்டி விருதும் சான்றிதழ்களையும் வழங்கிப் பெருமைப் படுத்தினார்கள்.