தஞ்சாவூர், ஏப். 30 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள முதல்சேரி அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டுக் கோட்டையிலிருந்து இன்று இரவு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தப்பாட்டம் இசை எழுப்பியும், மேலும் 300க்கும் மேற்பட்ட தாம்பாளங்களில் பூக்களை ஏந்திக்கொண்டு சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக நடந்து சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வழிபாடு செய்தனர். மேலும் ஆண்களுக்கு இணையாக பெண்களின் தப்பாட்டம் விண்ணை அதிரவைத்தது.

பட்டுக்கோட்டை அடுத்த  முதல்சேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு பட்டுக்கோட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் 300-க்கும் மேற்பட்ட தாம்பாளங்களில் பூக்களை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்று பூமாரி அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். ஆண்களுக்கு இணையாக பெண்களின் தப்பாட்டம் விண்ணை அதிரவைக்க பட்டுக்கோட்டை பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் பெரியதெரு, மணிக்கூண்டு, பழனியப்பன் தெரு, பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் வழியாக அதிராம்பட்டினம் சாலையில் உள்ள முதல்சேரி கிராமத்தை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஸ்ரீ பூமாரி அம்மனுக்கு பெண்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here