ராமநாதபுரம், மார்ச்
தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த அப்பாவி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை செய்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் பைசல் பேசினார்.
ராமநாதபுரத்தில் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை துாக்கிலிட வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் பைசல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற தீவிரவாதம் உள்ள நாடுகளில் கூட பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் ஜனநாயக நாடான இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகி விட்டது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சட்டம் எளிமையாக உள்ளதால் பாலியல் கொடுமையில் ஈடுபடுபவர்கள் எளிதில் ஜாமீனில் வெளியே வந்து விடுகின்றனர். சட்டத்தை கடுமையாக்க வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட கொடுர வெறியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரண தண்டன வழங்க வேண்டும். தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை வெளியேற்ற வேண்டும். எனவே, அவர்களுக்கு எதிரான முறையில் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்திகிறோம். பாஜக அரசின் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளில் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது. ஜெயலலிதா இருந்த போது பாஜக வின் பிரதமரான மோடிக்கு நெருக்கமாக இருந்த போதும் அவர்களது கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து போட்டி யிட்டதால்தான் 37 தொகுதிகளில் தனி பெரும் பான்மையில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது அதிமுக பெரும் ஏமாற்றத்தை சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் ரகுமான் அலி, மாவட்ட துணை தலைவர் முகம்மது பசீர், மாவட்ட துணை செயலாளர்கள் தினாஜ்கான், ராஜ்முகம்மது, பீமா இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.
மாவட்ட துணை செயலாளர் நசுருதீன் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here