சென்னை, டிச. 14 –

கார் ஒட்டுநர் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்து தொடர் நடவடிக்கைகளுக்கு பின் போலீசார் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.

சென்னை நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவரை கடந்த 2001ம் ஆண்டு கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு அனைவரும் தப்பி ஓடி விட்டனர். அந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2021 வரை சுமார் 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகமல் ராஜி(எ) உருளை ராஜி என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இவரை பிடிக்க நீலாங்கரை காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையிலான உதவி ஆய்வாளர் பிரதீப், தலைமை காவலர் பிரதீப், முதல் நிலை காவலர் இன்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர்.

கைதானவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கு ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும், கூட்டுக் கொள்ளையில் மிகவும் கைதேர்ந்த குற்றவாளி என்றும், திருப்பூர் மாவட்டத்தில் கொலை வழக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 கூட்டுக் கொள்ளை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் இவர் மீது உள்ளதும்.  2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் கைதான ராஜி(எ) உருளை ராஜி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here