கும்பகோணம், செப். 18 –
கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அபிநயா திருமணம் நடந்து 7 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து இளம்பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமைதான் தன் மகளின் இம்முடிவுக்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார்.
கொரநாட்டு கருப்பூர் தோப்பு தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் சரவணன் இவர் தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகள் அபிநயாவுக்கும் கடந்த 11.2.2022 அன்று கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணம் முடிந்து 7 மாதமே ஆன நிலையில் நேற்று இரவு பெண்ணின் தந்தைக்கு தங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மருமகன் சரவணன் தகவல் கொடுத்திருக்கிறார்.
மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது உங்கள் மகள் இறந்து விட்டதாகவும், அதன் அவரது உடலை பிணவறையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இளம் பெண்ணின் மரணம் குறித்து அவரது தந்தை தெரிவிப்பது யாதெனில் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினரும் தொந்தரவு செய்து வந்ததாகவும், இப்பிரச்சினைக் குறித்து பேசி சரி செய்து விடலாம் என்று இருந்த நிலையில், மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். மேலும் எனது மகளின் இறப்பிற்கு காரணம் சரவணனும் அவரது குடும்பத்தினருமே காரணம் எனவே அவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்ணின் தந்தை தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.





















