சென்னை, ஆக. 16 –
செய்தி சேகரிப்பு வினோத்
சென்னை மடிப்பாக்கத்தில் கிரண் என்பவர் அப் பகுதியில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் குமார் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலைப் பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பணத்தாசைக் கொண்டு கடை உரிமையாளருக்கு தெரியாமல் கடை அடைத்தப் பின்பு அருகில் அவருக்கு சொந்தமான சரக்கு வைக்கும் கிடங்கில் குட்காவை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் சம்பவ நாளன்று அவரைக் கையும் களவுமாக வியாபாரம் செய்யும் போது தகவல் அறிந்து அங்கு வந்த சென்னை மாநகராட்சி 14வது மண்டல அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மடிப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திலயே பிடித்துள்ளனர்.
பின்பு அவரை கைது செய்தும் அபராதம் ரூ.50 ஆயிரம் விதித்து சிறையில் அடைத்து உள்ளனர். இச்சம்பவம் நடந்து ஒருமாதம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பாகவும் உரிமையாளரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் இன்று திடீரென அவரது கடைக்கு சீல் வைக்க போலீசாருடன் அரசு அலுவலர்கள் வந்ததால் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நடைப்பெற்று அப்பகுதி முழுக்க ஒருவிதமான பதட்ட நிலை நிலை உருவானது. பின்னர் சம்மந்தமே இல்லாத கடைக்கு சீல் வைக்க வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் கடையின் லைசன்சை கேன்சல் செய்வதாக கூறி அங்கிருந்து சென்றனர்.
இதனிடையே தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை தென்சென்னை மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில் தமிழக அரசு உத்தரவை மீறி நாங்கள் செயல்பட மாட்டோம், அரசுக்கு ஆதரவாக நாங்கள் வியாபாரம் செய்வோம் என்றும் கூலி வேலை செய்தவர் கடையின் பின் புறம் உள்ள குடோனில் குட்கா விற்றதற்கு ரூபாய் 50,000 அபராதம் செலுத்திய நிலையில் தற்பொழுது சிறையில் உள்ளார். சம்மந்தமே இல்லாத கடைக்கு சீல் வைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை முன் வைத்து அவர் குட்காவை பறி முதல் செய்த அன்றே குடோனுக்கு சீல் வைப்பதை விட்டு விட்டு வெகு நாட்கள் கழித்து சீல் வைக்க வருவதன் நோக்கம் என்ன என்றும் கேள்வியை எழுப்பினார்.
இது தொடர்பாக நமக்கு வந்த தகவல் கடையில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி குட்கா விற்பனை செய்த குற்றத்திற்காக ரூபாய் 50,000 அபராதம் விதித்து, தற்பொழுது சிறையில் உள்ள நிலையில், குட்காவை பதுக்கி வைத்து நம்பிக்கைக்கு விரோதமான செயலை செய்த குற்றவாளிக்கு தண்டனையும் அபராதமும் விதித்த நிலை என்பது ஒரு புறம் இருக்க அச்சம்பவம் நடந்த பகுதி சரக்கு வைத்திருக்கும் கிடங்கு, ஆனால் செயலுக்கு சம்மந்தமே இல்லாத இடமான கடைக்கு சீல் வைக்க அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் எடுக்கும் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு விரோதமான செயல் என்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க எடுக்கும் நடவடிக்கை இதுவென கடையின் உரிமையாளர் தரப்பில் கூறுகிறார்கள். எது எப்படி இருப்பினும் சம்பவம் நடந்து ஒருமாத காலத்திற்கு பின்பு திடீரென இன்று சீல் வைக்கும் நடவடிக்கை என்பது உள் நோக்கம் உள்ளதாகவே அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். மேலும் கொரோனா தொற்று நேரம் வியாபாரங்கள் நொடித்திருக்கும் இந்நிலையில் இது போன்ற நடவடிக்கை என்பது வியாபாரிகள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.