கும்பகோணம், டிச. 28

கும்பகோணத்தில் ரயிலடி அருகே உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் ஜிகே வாசனின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு 5 நபர்களுக்கு தையல் இயந்திரம் 557 நபர்களுக்கு வேஷ்டி சேலைகளை முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் எம் கே ஆர் அசோக் குமார் நகர தலைவர் பி எஸ் ஷங்கர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் அருண்குமார் மாவட்ட துணைத் தலைவர் சிவா மாவட்ட நிர்வாகி செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here