பள்ளி மாணவ,மாணவியர்க்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைப்பெற இருப்பதாக கலைப்பண்பாட்டு துறை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போட்டிகள் கலைப் பண்பாட்டுதுறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை: நவ.13-

தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட  சிறார்களுக்குகலைப்பயிற்சிகள் அளித்து, மேடையேற்றம் செய்து வருகிறது.  சிறார்களிடையே மறைந்து கிடக்கும் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய நான்கு கலைகளில் போட்டிகள் நடத்தியும்அவற்றில் முதல் பரிசு பெற்றவர்களிடையே  மாநில அளவில் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது.  8+ -12, 12+ -16 வயது வகையில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சிறார்கள் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் ஜவகர் சிறுவர் மன்ற செலவுகளிலேயே கலந்து கொள்ளவும், மாநில அளவில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய நான்கு வகைக் கலைகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ.7,500/-, மூன்றாம் பரிசாக ரூ.5,000/- என மொத்தம் 24 மாணவர்களுக்கு ரூ.1,80,000/-த்திற்கு பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

அவ்வகையில்முதற்கட்டமாக 5-8, 8+ -12, 12+ -16 என்ற மூன்று வயது வகைப் பிரிவில் சென்னை மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் 16.11.2019 அன்று பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை போட்டிகளும்,  17.11.2019 அன்று ஓவியப் போட்டியும் நடைபெறவுள்ளது.    

கலைப்போட்டிகள் அனைத்தும் சென்னை-28, இராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையிலுள்ள, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.போட்டிகளில் கலந்து கொள்ளும், மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் பிறந்த தேதி (BIRTH CERTFICATE) சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.

பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய  போட்டிகள் 5-8, 8+-12  வயது வகை மாணவ, மாணவியருக்கு காலை 9.30 மணி  முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும்,  12+ -16 வயது வகை மாணவ, மாணவியருக்கு பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 மணி வரையிலும்ஓவியப் போட்டிகள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரையிலும் நடைபெறும்.போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.

மாவட்ட போட்டியில்,  8+-12, 12+ -16 வயது வகைப் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கிடையே நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் அரசின் செலவிலேயே பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். 

இப்போட்டிக்கான  விதிமுறைகள் 

  1. பரதநாட்டியம் (செவ்வியல்) பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும், திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென் டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
  2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றம் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென் டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.  
  3. குரலிசை

 கர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும்.   மேற்கத்திய  இசைதிரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு  அனுமதியில்லை.  குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படும். 

  1. ஓவியம்

 4030 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் , ஆயில் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைககள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை.  ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்   

  1. வயது விவரம் (1.6.2018 அன்று உள்ளபடி 16 வயது)

 அ.  5 முதல் 8 வயது பிரிவு   – 1.6.2010 முதல் 31.5.2013 வரை ஆ. 9 முதல் 12 வயது பிரிவு – 1.6.2006 முதல் 31.5.2010 வரை  இ. 13 முதல் 16 வயது பிரிவு – 1.6.2002 முதல் 31.5.2006 வரை  

மேலும், விவரங்களுக்கு 044-28192152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here