சென்னை, மார்ச். 16 –
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சி.ஐ.ஏடி.ஐ.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநராட்சி பள்ளிகளில் கட்டட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல், டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பிக்கும் திறனை மேம்படுத்துதல், மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்துதல் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் போன்ற 6 முக்கிய காரணிகளை கொண்டு முழுவதுமாக நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் 28 பள்ளிகள் முழுமையாக நவீன வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட் உள்ளன. அதன்படி இந்தப்பள்ளிகளில் ஆஃமார்ட் வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு கட்டமைப்புகள் கழிவறைகள் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் சிறப்பு ஈளையாட்டு பயிற்சிகள் ஸ்டெம் ஆய்வகங்கள் மற்றும் மொழிச்சார்ந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் மண்ணலம் வார்டு 137 ல் நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் ரு. 3.40 கோடி மதிப்பீட்டில் உட்கட்ட்டமைப்புளை மேம்படுத்த பணிகள் நடைப்பெற்று வருகின்றன இந்தப்பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆணையாளர் க கன் தீப் சிங் பேடி நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற் கொண்டார்.
நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து மாணவ மாணவியர்களும் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கழிவறை கட்ட டம் 3 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் ஸ்டெம் மற்றமு அறிவிநல் ஆய்வகங்கள், பாதுகாப்பான நுழைவு வாயில், அறிவிப்பு பலகைகள், கலையரங்கம், உள் விளையாட்டுக்களுக்கான அடிப்படை மற்றும் சிறந்த உட்கட்டமைப்புகள், நண்ணீர் வசதி உட்பட ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் மாணவ மாணவியர்களுக்கான அடிப்படை மற்றும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்கான பணிகள் இப்பள்ளியில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்ட வர ஆணையாளர் அறிவுறுத்திவுள்ளார்.
முன்னதாக எம்.ஜி ஆர் நகரில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு மாண்டிச்சோரி கல்வி முறை மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி கற்பிக்கும் முறைகளை ஆணையாளர் பார்வியிட்டார்.
இந்த ஆய்வின் போது 137 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.தனசேகரன், துணை ஆணையாளர் கல்வி டி.சினேகா, மத்திய வட்டார துணை ஆணையாளர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைப்பொறியாளர் திடக்கழிவு மேலாண்மை என். மகேசன், மேற்பார்வை பொறியாளர் சிறப்பு திட்டங்கள் பி.வி.பாபு உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.