கும்பகோணம், மார்ச். 15 –

சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி குருக்கள் இவரிடம் சில உலோகத்தினால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் வெள்ளிக் கவசங்கள் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சூரியமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நெமிலி கிராமத்தில் உள்ள விசுவநாத சுவாமி திருக்கோவில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர் மற்றும் பிரதோஷ நாயகி சிலையையும் காத்தாயி அம்மன் வெள்ளி கவசத்தையும் பறிமுதல் செய்தனர். .

இவைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்த சம்பவம் தொடர்பாக சூரிய மூர்த்தி குருக்களை கைது செய்த சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் இன்று அவரை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளையும் வெள்ளி கவசங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here