ஆசிரியர் தின விழாவில் வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை கொரோனா உதவிக்காக முதலமைச்சர் நிவாரண தொகையாக வழங்கிய பார்வையற்ற ஆசிரியர்
செங்கல்பட்டு, செப். 5 –
ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர் தினம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது
இந்த விழாவில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் எம்.பி செல்வம், எம்.எல்.ஏ வரலட்சுமி பங்கேற்றனர்
பள்ளிக் கல்விதுறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் பத்து ஆசிரிய்ர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் ஊக்கதொகை, மற்றும் சான்றிதழ், விருதும் வழங்கப்பட்டது
விழாவில் ஆசிரியர் விருது பெற்ற பார்வையற்ற சென்னை சிட்லபாக்கம் பட்டதாரி ஆசிரியர் சொக்கலிங்கம் ஆசிரியர் தின விழாவில் கொடுத்த 10 ஆயிரம் ஊக்க தொகையை கொரோனா நிவாரண உதவி தொகையாக முதலமைச்சர் நிவாரணத்திற்க்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சிரியர் ராகுல்நாத்திடம் வழங்கினார்.