திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ய வருவதாக காவல் உதவி ஆய்வாளருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 கிலோ கஞ்சா மூட்டைகளுடன் வந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து மேற் கொண்ட விசாரணைக்காக திருமுல்லைவாயில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
திருமுல்லைவாயில், செப் . 5 –
திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனைக்காக நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ஒருவர் வருகிறார் என்ற தகவல் திருமுல்லைவாயில் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சீதாலட்சுமிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல் உதவி ஆய்வாளர் விரைந்து சென்று..
அங்கு சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் கையில் பையுடன் நின்றிருந்த நபரை சோதனை செய்ததில் அவரிடம் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டதில் அவர் பெயர் முகமது உசேன் என்றும் வயது (17) தந்தை பெயர் முகமது அப்துல்லா பெருமாள் கோவில் தெரு இந்திராநகர் ரெட்டில்ஸ் சென்னை 52 என்ற முகவரியில் வசிப்பது தெரிய வந்தது.
அவர் கஞ்சா விற்பனை செய்வதாகவும், நேற்று 4.9.21ஆம் தேதி சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு திருமுல்லைவாயல் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்ய வந்ததாகவும் மேற்கொண்ட போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. எதிரி மீது போதைப் பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து எதிரியை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.