பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு, செப். 9 –
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் வீட்டுமனை பிரிவிற்காக போடப்பட்ட சாலையை ஆக்கிரமித்து அசோக் குமார் என்பவர் சுற்றுச்சுவர் கட்டியுள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் போலி பட்டா மூலம் அந்த இடத்தை தனக்கு சொந்தமானதாக அரசு அதிகாரிகளிடம் காட்டி வந்துள்ளார்.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலி பட்டா மீது விசாரணை நடத்த கோரியும், தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள சாலையை மீட்டு தரக்கோரியும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்