திருத்துறைப்பூண்டி, மே. 19 –
பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் வழி காட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றி வேல் ஆலோசனைப் படியும் , திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று 18.05.22 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினை கல்லூரியின் முதல்வர் முனைவர் சக்தி வேல் துவங்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டியின் செயலாளரும் மாநில பொருளாளருமாகிய வரதராஜன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
திருவாருர் மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, திருவாரூர் அரசு மருத்துவமனையின் இரத்த வங்கி அதிகாரி மருத்துவர் ப்ரீத்தா, ரெட் கிராஸ் சொசைட்டி திருத்துறைப்பூண்டி ரெட் கிராஸ் சொசைட்டி கிளையின் தலைவர் சிவ சண்முக வடிவேல், கல்லூரி யின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் குமரவேல், பேரிடர் மேலாண்மை மாநில பயிற்றுநர் பெஞ்சமின், அலுவலக கணக்கர் கீதா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இம்முகாமில் 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இரத்த தானம் செய்தனர்.




















