திருவிடைமருதூர், அக். 4 –
கும்பகோணம் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள வாணாபுரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த சமையல் வேலை பார்க்கும் கர்ணன் (25 ) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற் கொண்டனர்.
திருவிடைமருதூர் அருகே உள்ளது வாணாபுரம் கிராமம் அக் கிரமத்தில் மனநலம் பாதித்த 15 வயது சிறுமிக்கு அதே பகுதியில் வசிக்கும் கர்ணன் என்கிற 25 வயது இளைஞர் அச்சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், ஊர்காரர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததை கண்டு ஆத்திரம் கொண்ட அப்பகுதி மக்கள் கர்ணனை பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து
நேற்று இரவு கர்ணன் கும்பகோணம் அருகே கோட்டையூரில் தனது நண்பர் வீட்டில் தங்கிவுள்ளார். அதை அறிந்து ஊர் மக்கள் ஒன்றாக திரண்டு சென்று கர்ணனை பிடித்து வந்து தங்கள் ஊரில் வைத்து அடித்தகாக கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்து வந்த திருவிடைமருதூர் காவல் துறையினர் கர்ணனை மீட்டு கும்பகோணம் அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .
இதனிடையே சிறுமியின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, கர்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.