திருவாரூர், ஏப்.15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 27 வது திவ்ய தேசமாக விளங்குகிறது.
மேலும் இவ்வாலயத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆலயமான அருள்மிகு ஶ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீபக்தவசல பெருமாள் ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
அதனை முன்னிட்டு உற்சவர் சீனிவாசபெருமாள் வைரகீரிடம் அணிந்து கிளிதடி கையில் ஏந்தி உற்சவர் அலங்காரம் செய்யப்பட்டு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினார். பின்பு உற்சவ பெருமாளுக்கு தீபரதனை நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கருடபகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க துவராயோகணம் எனும் கொடி ஏற்றம் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருடசேவை வரும் 18ஆம் தேதியும் , சித்திரை தேரோட்டம் வருகிற 23 ஆம் தேதியும் நடைப்பெறுகிறது.





















