மயிலாடுதுறை, மே. 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதும்  பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளி வந்து மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. மேலும்  புதிய சாலை அமைத்த போது வேகத்தடை அமைக்காத்தே அவ்விபத்துக்கு காரணம் என அப்பகுதி வாழ் பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி முதல் கும்பகோணம் வரையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. குத்தாலம் பகுதியில் தற்போது அகலப்படுத்தும் பணி நிறைவடைந்த நிலையில் குத்தாலம் தேரடி என்ற இடத்தில் அபாயகரமான வளைவு பகுதியில் ஏற்கனவே இருந்த வேகத்தடயை புதிய சாலை அமைக்கும் போது வேகத்தடை அமைக்கவில்லை அதனால் அந்த பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று குத்தாலம் அருகே அரையபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது தேரடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்து வேறொரு வாகனத்தை வேகமாக முந்த முயன்ற போது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

அதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அச் சம்பவம் குறித்து குத்தாலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவ்விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் விடுத்து உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here