டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா கொடூர படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பாக மணவாள நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் , செப். 13 –
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே டெல்லியில் நடந்த பெண் காவலர் ராபியா சபியா கொடூரமான படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சிகள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் .தமிழர் விடுதலைக் கழகம். மற்றும் தவ்கித் ஜமாத் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து கண்டன உரை முழக்கம் எழுப்பினார்கள்.
மேலும், டில்லி காவல்துறையில் பணிபுரிந்து வந்த ராபியா சைய்பி 21 வயதான இஸ்லாமிய இளம் பெண்ணான இவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் உடல் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறையை சேர்ந்தவர்கள் இந்த பெண்ணின் கொலையை காவல்துறையே மூடிமறைக்கும் வகையில் மனிதஉரிமை மீறல் நடந்துள்ளது.
என்றும், ராபியா சைய்பி கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். என்பதை வலியுறுத்தியும், இத்தகைய கொடூர கொலை செய்த உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இறுதியாக ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது மேலும் தலைமை சம்பத் பூபேஷ் ஆவடி நாகராசன். முன்னிலை தோழர் நிஜாம். ஆகாஷ். கண்டன உரை தோழர் ஏழுமலை தோழர் கஜேந்திரன் தோழர் சுந்தரமூர்த்தி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மோகனா ஆகியோர்களால் கண்டன உரையாற்றபட்டது.