காவேரி தொழிற்நுட்பக்குழு தலைவர் பொறியாளர் ஆர்.சுப்பிரமணியன் காவேரி ந தி நீர் பிரச்சனையும், அது குறித்து உச்சநீதிமன்றம் கையாண்ட விதமும் என்ற தலைப்பில் அவர் தொகுத்தப் புத்தகத்தை இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.

 

சென்னை, ஜூலை 29-

கர்நாடக மாநிலம் குடகு மலைத் தொடரில் தோன்றித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாய்ந்து வங்க கடலில் கலக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காவேரி, பண்டைக்காலம் முதல் தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. காவரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில்  கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களுக் கிடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. இதற்காக காவேரி நடுவர் மன்றம், காவேரி நதிநீர் ஆணையம், காவேரி நீர் ஒழுங்காற்றுக் குழு போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்தப் பட்டு, பல காலக் கட்டங்களில் பல தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

இப் பிரச்சினை தொடர்பாக 1970 முதல் 2018 வரை தமிழ்நாடு எடுத்த நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் தொகுக்கப்பட்ட வழக்குகள் மற்றும் அதன் விவரங்கள், உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினையை கையாண்ட விதம், வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஆகியவற்றை தொகுத்தும் வரிசைப்படுத்தியும் அவர் அந்தப் புத்தகத்தில் வழங்கிவுள்ளார். அதனை திருச்சியில் உள்ள நீர் மேலாண்மை பயிற்சி நிறுவனம் தயாரித்துவுள்ளது இன்று அதன் முதல் பிரதியை  அமைச்சர் துரை முருகன் வெளயிட பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா பெற்றுக் கொண்டார்.

இப்புத்தகத்தில் தொகுக்கப் பட்டுள்ள குறிப்புகள் விவரங்கள் தெளிவாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளதால் இது அரசு அலவலர்கள், பொறியளர்கள், மற்றும் அடுத்த தலைமுறை யினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந் நிகழ்ச்சியில் காவேரி தொழில் நுட்பக் குழு தலைவர் பொறியாளர் ஆர்.சுப்பிரமனியன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே.இரமமூர்த்தி, திருச்சி நீர் மேலாண்மைப் பயிற்சி நிலையத்தின் தலைமைப் பொறியாளர் எம்.ராஜ்மோகன், திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் ச.ராம மூர்த்தி, சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் ஜி.முரளிதரன், கோவை மண்டலத் தலைமைப் பொறியாளர் கே.அசோகன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் எம்.கிருஷ்ணன், பொதுப்பணித் துறைச் சிறப்புச் செயலாளர் ரவீந்தரபாபு, மற்றும் தலைமைப் பொறியாளர்கள் ஏ.தனபால், சி.பொன்ராஜ், கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here