திருவாரூர். ஏப். 25 –
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் திருவோணமங்கலம் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டு அருகில் உள்ள அமராவதி ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து தெரு வீதிகளில் வலம் வந்து தீ குண்டத்தில் சக்தி கரகம் முதலில் இறங்கியவுடன், தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இவ்விழாவில் வாணவேடிக்கைகளுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் அருள் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை திருவோணமங்கலம் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.





















