நாகப்பட்டிணம், மார்ச். 19 –
நாகப்பட்டிணம் நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். மேலும் இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு விற்பனையை முடித்து விட்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ஷோகேஸில் அடுக்கி வைத்திருந்த ரூ. 1.20 இலட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனது தெரிய வந்தது.
மேலும், இதுக்குறித்து உடனடியாக கடையின் உரிமையாளரான கணேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து அக்கொள்ளையில் ஈடுப்பட்டுள்ள திருடர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மானாம் பூசாவடி சிவன் கோவில் தேர்வைச் சேர்ந்த குமரேசனை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 13 டச் போன்கள் ,1 பவர் பேங் மற்றும் 1 ப்ளூடூத் என சுமார் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் மீட்டனர். கைதான நபர் மீது தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
























