செங்கல்பட்டு, மே. 15 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 5-பேர்கள் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும், மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர்கள் கவலைக்கிடமான நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில் தலா ரூ. 10-லட்சம் ஒவ்வொருக்குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கி உள்ளார். மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக ஐந்து பேர்கள் நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.





















