கும்பகோணம், அக். 27 –
மூன்று மாத காலமாக, நூறு நாள் சம்பளம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளதை கண்டித்தும், தொடர்ந்து அனைவருக்கும் நூறு நாள் பணி வழங்கிட கோரியும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நூறு நாள் வேலை பார்த்தவர்களுக்கு கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்காமல் நிலுவை வைத்துள்ள தொகையை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உடனடியாக வழங்கிட கோரியும், எந்தவித பாகுபாடும் பார்க்காமல், நூறு நாள் வேலையை அனைவருக்கும் தொடர்ந்து வழங்கிட கோரியும் இன்று நடைபெற்ற கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் கே பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது இதில், சிபிஎம் மாவட்டக்குழு ஆர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்