தேனி மாவட்டம் கூடலூரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் ரா கணபதி ராசன் எழுதிய வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா என் எஸ் கே பி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கதிரேசன் தலைமையிலும் கம்பம் ஏழவிவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சையது அபுதாகிர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த விழாவில் தேனி தமிழ்ச் சங்க தலைவர் மு.சுப் பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் அவர் பேசியபோது சிலம்பு நாயகியான கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கட்டிய மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சென்று வழிபடும் நிலையினை மாற்றி ஆண்டு முழுவதும் வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை வழிவகை செய்ய வேண்டும் என்றும் மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியினை புதுப்பித்து கட்டப்படுவது மூலம் அங்கு சென்று வர சாலை வசதிகள் மற்றும் அனைத்து வசதிகள் செய்து தர தமிழக மற்றும் கேரள அரசுகள் முன்வரவேண்டும் என்றும் 60 ஆண்டுகளாக இது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு செய்வதும் வரலாற்று செய்திகளை சேகரித்து மங்கள தேவி கண்ணகிக்கும் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்திற்கும் பெரும்புகழை சேர்த்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் கணபதி ராசன்அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இளங்கோவடிகள் விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று  கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here