கும்பகோணம், மார்ச். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசினர் கலைக்கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து நடத்தும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் நடைபெற்றது. அதில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் குருதிக்கொடை வழங்கினார்கள்.

கும்பகோணத்தில் அரசினர் கலைக்கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து 135 வது குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் கல்லூரி முதல்வர் மாதவி, தலைமையில் நடைபெற்றது. அதில் கல்லூரி முதல்வர் பேசிய போது மனிதநேயத்துடன் இரத்ததானம் வழங்கிய நமது கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் இரத்ததானம் என்பது ஒரு உயிரை காப்பாற்றக்கூடிய செயலாகும். நாம் பிறருக்கு இரத்ததானம் அளிப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது மட்டுமல்லாமல், இன்னொரு உயிரையும் காப்பாற்ற முடியும். என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றார். மேலும் இயன்ற அளவில் ரத்த வங்கிளுக்கு, மாணவ மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்டனைவரும் இரத்த தானம் வழங்கிட வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அம்முகாமில் பங்கேற்ற பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் குருதிக்கொடை என்னும் இரத்த தானம் வழங்கினார்கள்.  இந்நிகழ்ச்சியில் கல்லூரி இணை இயக்குநர் தனராஜன், இணை பேராசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், குணசேகரன், யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுகந்தி முத்தையா, செவிலிய கண்காணிப்பாளர் சலீம் பாட்ஷா, மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here