திருவண்ணாமலை, பிப். 27 –

மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகளிh;கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் 502.49 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் பெற்று பயனடைந்த பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (ஐகுயுனு) உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிர்களை கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 7 இலட்சத்து 22 ஆயிரம் குழுக்களுக்கு ஒரு இலட்சத்து நான்காயிரத்து பதிமூன்று கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டு எழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தாண்டு சமூக பொருளாதாரத்தில் மகளிர் குழுக்கள் மேம்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இந்தாண்டில் வழங்க அந்த அறிவிப்பினை சட்டமன்றத்தில் அறிவித்தார் அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14.12.2021 அன்று 1831 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கி, சுய உதவிக்குழுக்களின் முன்னேற்றம் குறித்தும், சுய உதவிக்குழு இயக்கத்தில் இணைந்து அவர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் 5 மாவட்டங்களை சேர்ந்த சுயஉதவிக்குழு உறுப்பினர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

பல்வேறு மாவட்டங்களில் வரப்பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் கருத்துகளை கேட்ட போது ஒற்றுமை தான் நம்முடைய பலம் என்ற அடிப்படையில் நம்முடைய, திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு எடுத்துக்கொண்டால் ஊரகப்பகுதியில் 14,666 குழுக்கள், 2,10,396 உறுப்பினர்கள் உள்ளனர் நகர பகுதியில் 1,732 குழுக்கள் 29,530 உறுப்பினர்கள் ஆக திருவண்ணாமலை மாவட்டத்தில் 19,382 குழுக்களுக்கு 2,39,965 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பான குழுவாக நம்முடைய மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. அந்த வகையில் 2021-2022 என்ற நிதியாண்டில் 1095 புதிய சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆதார நிதியின் மூலம் 2021-22 ஆம் நிதியாண்டில் 1478 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.221.70 இலட்சமும், சமுதாய முதலீட்டு நிதியின் மூலம் 1967 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1774.30 இலட்சமும், நலிவுற்றோருக்கான நிதியின் மூலம் 418 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.104.50 இலட்சமும், சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்பு மூலம் 8748 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.478.56 கோடி தொகை வங்கி கடனாகவும், தனிநபர் தொழில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ளுநுP ஐ மூலம் 264 நபர்களுக்கு ரூ.67.54 இலட்சமும், ளுநுPபு மூலம் 195 குழுக்களுக்கு ரூ.2.92 கோடி தொகையும் என மொத்தம் 502.49 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

2021-22 ஆம் நிதியாண்டில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் 258 இ-பொது சேவை மையமும், உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் 2021-22 ஆம் நிதியாண்டில் வாழ்வாதார வட்டாரங்களான 11 வட்டாரங்களில் 472 உற்பத்தியாளர் குழு அமைக்க இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு 258 குழு அமைத்து வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஒருங்கிணைந்த முறையில் 11 கூட்டுப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ் 227 ஊராட்சிகளில் 11350 பயனாளிகளை தேர்வு செய்து விதைகள் வாங்கி வழங்கப்பட்டு அவரவர் வீடுகளில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கப்படவுள்ளது. 729 இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2552 நபா;களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் 510 நபர்களுக்கு சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

 திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், சி.கெங்கம்பட்டு ஊராட்சியை சேர்ந்த துளசி மகளிர் குழு உறுப்பினர் திருமதி.எஸ்.காந்திமதி என்பவர் தெரிவித்ததாவது…

நான் ஒரு ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். என் கணவர் பெயர் திரு.செல்வ அரசு, அவர் விவசாயம் செய்கிறார்.. எனக்கு 3 பெண் குழந்தைகள். என் 3 பெண் குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்துள்ளேன். 2 பெண் குழந்தைகள் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளனர். ஒரு பெண் குழந்தையை பி.சி.ஏ படிக்க வைத்துள்ளேன். பின் 3 பெண் குழந்தைகளையும் திருமணம் செய்து வைத்துள்ளேன்.

குடும்ப வருமானத்திற்காகவும், சிறுகடன் தேவையை பூர்த்தி செய்யவதற்காகவும் 2003-ல் துளசி மகளிர் உதவிக்குழுவை ஆரம்பித்தேன். நான் துளசி மகளிர் சுய உதவிக்குழுவில் கடந்த 18 ஆண்டுகளாக ஊக்குநராக சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். நான் மகளிர் திட்டம் மூலம் ஒன்றிய பயிற்றுநராக மாதம் ரூ.9ஆயிரம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். மகளிர் திட்ட உதவியோட சுழல் நிதிக்கடன், பொருளாதாரகடன், நேரடிக்கடன் பெற்று கறவைமாடு வாங்கி தொழில் செய்து அதன் மூலம் ஒரு உறுப்பினருக்கு மாதம் ரூ.15ஆயிரம் வரை லாபம் ஈட்டுகிறோம். கூட்டமைப்பில் செயலாளராக சிறப்பாக செயல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்றேன். பல கூட்டமைப்புகள் களப்பயணமாக வந்தனர். கறவைமாடு வளர்ப்பதால் கிடைக்கும் லாபம் முழுமையாக மக்களுக்கு கிடைக்க தொழில் குழு உருவாக்கினேன்.

தற்போது, தூய்மைபாரத இயக்கத்தின் மூலம் மாநில பயிற்றுநராக உள்ளேன். திறந்த வெளியில் கிராமப்புற பெண்கள் மலம் கழித்தல் நிலையை மாற்றிடவும், வீடு வீடாக சென்று கழிப்பறைகள் கட்ட பலமுயற்சிகளை மேற்கொண்டும், மேலும் அதற்கான பல விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி சுகாதாரத்தை தக்க வைக்கவும், நோயற்ற வாழ்கை வாழவும் பணிபுரிந்து வருகிறேன். எங்களை வாழ வழி காட்டிய மகளிர் திட்டம் மற்றும் மகளிருக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், சி.கெங்கப்பட்டு ஊராட்சியில் துளசி மகளிர் குழு உறுப்பினராக உள்ள எஸ்.காந்திமதி தென்னரசி அவர்களிடம் காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்

இந்த உரையாடலின் போது, காந்திமதி அவர்கள் அனைத்து மகளிர் சார்பாகவும், மகளிர்குழுக்கள் சார்பாகவும், மறைந்தும், நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டா; கலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுயஉதவிக்குழுவின் மூலம் உங்களின் அனுபவம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து கேட்டதற்கு, சுயஉதவி குழுக்களில் வெளியில் வராத மக்கள் வெளியில் வந்தும், மகளிர்கள் சுயமாக தொழில் செய்வதற்கும், நம்முடைய தமிழ்நாடு அரசும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 10 வருடத்திற்கு முன்பு, பழைய ஆட்சியல் சுய உதவிக்கடன், பொருளாதார கடன் அதிகம் வாங்கி இருக்கிறோம். அதன் மூலம் மகளிர் முன்னேற்றமடைந்து ஒவ்வொரு குடும்பமும் ரூ.10,ஆயிரம் முதல் ரூ.15,ஆயிரம் வரை சுயமாக வருமானம் ஈட்டுகிறோம். தற்சமயம் மகளிர் குழுக்கள் வாங்கி அனைத்து கடன்களும் கொரோனா காலத்தில் முழுமையாக தள்ளுபடி செய்து, அனைத்து மகளிர் வறுமையும் தீர்த்து உள்ளீர்கள் என்று பெருமையுடன் கூறி கொள்கிறோம்.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியை ஒழிக்க வேண்டும். நெகிழி பயன்படுத்த பயன்படுத்த நிலத்திடி நீர் மட்டும் குறைந்து கொண்டே போகும். எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாத நிலை வரும். நெகிழியை வெளியில் தூக்கி எறியும் போது, அதை கால்நடைகள் உண்டு, உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று, கூட்டங்கள் மூலமாகவும், வீதி, வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி நெகிழிற்கு பதிலான மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாற்றங்கள் உண்டாக்கி வருகிறோம் என்றார். இதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுற்றுச்சூழல் குறித்து, விழிப்புணர்வு செய்தமைக்கும், நெகிழி குறித்த பிரச்சாரம் செய்தமைக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை பாராட்டினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், சி.கெங்கம்பட்டு ஊராட்சியை சேர்ந்த துளசி மகளிர் குழு உறுப்பினர் திருமதி.சுலோக்ஷனா (வயது 65) என்பவர் தெரிவித்ததாவது …

நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். என் கணவர் பெயர் வரதன். எனக்கு 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளது.  நான் 05.03.2003-ல் துளசி மகளிர் உதவிக்குழுவில் ஊக்குநராக செயல்பட்டு வருகிறேன். நான் மகளிர் திட்டத்தின் மூலம் புது வாழ்வு திட்ட குழுக்கள் மற்றும் மாவட்ட சமூக தணிக்கை குழுவில் பயிற்சியாளராக இருந்தேன். நான் மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கு சென்று குழுக்களுக்கு பயிற்சி அளிப்பேன். இந்த மகளிர் உதவிக்குழுவில் சேர்வதற்கு முன்னாள், நான் தனியாக பேருந்தில் பயணிக்கும் அளவிற்கு தைரியம் இல்லை. ஆனால், இப்பொழுது வெளிமாவட்டங்களுக்கு சென்றும் பயிற்சி அளிக்கிறேன். இந்த பயிற்சி அளிப்பதனால் நான் மாதம் 5000 முதல் 6000 வரை வருமானம் ஈட்டுகிறேன். எங்களின் தேவையை நான் பூர்த்தி செய்து கொள்கிறேன். முடிந்த அளவு எங்களின் பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கிறேன். “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த குழுவில் சேர்வதற்கு முன்னாள் என்னை யாருக்கும் தெரியாது. ஆனால் இப்பொழுது எந்த மாவட்டங்களுக்கு சென்றாலும் மகளிர் குழுவில் உள்ள அனைவருக்கும் என்னை தெரிகிறது. என்னை மரியாதையாக நடத்துறாங்க. மகளிர் சுய உதவிக்குழு என்ற சிறப்பான திட்டத்தை ஏற்படுத்தி தந்த முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம், மலையாம்பட்டு ஊராட்சியை சேர்ந்த சாதனை மகளிர் குழு உறுப்பினர் செல்வி.உஷா (வயது 41) என்பவர் தெரிவித்ததாவது…

நான் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. சாதனை மகளிர் குழுவில் மார்ச் 2017 முதல் 5 வருடமாக உறுப்பினராக உள்ளேன். மகளிர் சுய உதவிக்குழுவின் வளர்ச்சி நிதியின் மூலம் ரூ.20,ஆயிரம் கடனாக பெற்று பொட்டிக்கடை (சிறிய மளிகைக்கடை) வைத்துள்ளேன். மளிகைக்கடையின் மூலம் எனக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வருமானம் ஈட்டுகிறேன். இதில் வரும் வருமானத்தின் மூலம் தான் என் குடும்பத்தை நடத்தி வருகிறேன். பார்வை குறைபாடு காரணமாக நான் எங்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை.

என்னிடம் வருமானம் இல்லாமல், என்னுடை தேவைக்கு பிறரிடம் எதிர்பார்க்கும் நிலையில் இருந்தேன். ஆனால் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக சேர்ந்த பிறகு எனது தேவையை நான் பூர்த்தி செய்து கொள்கிறேன். இதன் மூலம்; பெண்களை அனைத்து வகையிலும் முன்னேறி சொந்தகாலில் நிற்க வழிவகை செய்தமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது குழு கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் ஊராட்சி ஒன்றியம், கேளுர் ஊராட்சியை சேர்ந்த ஸ்ரீ ஓம்சக்தி மகளிர் குழு உறுப்பினர் திருமதி.லதா மகேஸ்வரி (வயது 39) என்பவர் தெரிவித்ததாவது…

நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். என் கணவர் பெயர் பாண்டு. எனக்கு 1-ஆண் குழந்தை உள்ளது. நான் 11 வருடமாக மகளிர் குழுவில் ஊக்குநராக செயல்பட்டு வருகிறேன். கூட்டமைப்பு நிதியின் மூலம் ரூ.20,ஆயிரம் கடனாக பெற்று கறவை மாடு வாங்கி, பால் வியாபாரம் செய்து வருகிறேன். இதன் மூலம் மாதம் 10, ஆயிரம் வருமானம் ஈட்டுகிறேன். இதன் மூலம் என் குடும்பத்தை நான் சிறப்பாக நடத்தி வருகிறேன். ஸ்ரீ ஓம்சக்தி மகளிர் குழுவின் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையை உருவாக்குதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மகளிர் குழுவின் மூலம் உறுப்பினர்களுக்கு கோழிகள், ஆடுகள் தருவதனுடன் அதை பராமரிப்பதற்காக ஆட்டுக்கொட்டகையும் அமைத்து தரப்படும். இதன் மூலம் பயனடைந்த மகளிர்கள் அனைவரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு மனநெகிழ்ந்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

தொகுப்பு: திரு.செ.ஆசைத்தம்பி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ), திருவண்ணாமலை மாவட்டம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here