திருத்துறைப்பூண்டி, ஏப். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்…

திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவாலயத்தில்  சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பிறவி மருந்துதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

மேலும் அக்கோவிலுக்கு எதிர்ப்புறம் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்ததால் அவரது பிறவி தோஷம் மறைந்ததாகவும் கோயில் உள்ளே அம்பாள் சன்னதிக்கு எதிரே மாங்கல்ய தீர்த்தம் அமைந்துள்ளது இதில் திருமணம் ஆகாத கன்னி பெண்கள் நீராடி அம்பாளை வணங்கினால் திருமண தோஷங்கள் நீங்கும் என்பது அத்தல வரலாறு கூறும் ஐதீகமாகும்.

அஸ்வினி நட்சத்திரத்திற்கான பரிகார ஸ்தலமாக விளங்கும் புகழ் பெற்ற இக்கோயிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த மார்ச் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினத்தோறும் சிறப்பு பூஜைகள் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா இன்றைய தினம் காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் செயலாளர் சீனிவாசன் துணைத்தலைவர் ஆர் கே சேகர் தமிழக லாரிகள் உரிமையாளர் மாநில சம்மேளன தலைவர் தனராஜ் தமிழக லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் மாநில சம்மேளன முன்னாள் தலைவர் குமாரசாமி திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் திருத்துறைப்பூண்டி திமுக நகர செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் கோயில் செயல் அலுவலர் முருகையன் ஆகியோர் முன்னிலையில் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திவாகரன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்கள்.

முன்னதாக சிவவாத்தியங்கள் முழங்க மேலவீதி கீழவீதி. தெற்குவீதி. வடக்குவீதி என நான்கு வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு தேர்நிலைக்கு வரும் டி.எஸ்.பி. சோமசுந்தரம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த விடங்கா தியாகேசா என கோசமிட்டு வடம் பிடித்து இழுத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here