காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற மே மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இன்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது.

சுப்ரீம்கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வாரிய கமிட்டி உறுப்பினர்கள் வினோத் ராய், டயானா எடுல்ஜி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இதில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதா? வேண்டாமா? மற்றும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? போன்றவற்றை பற்றி ஆலோசிக்கிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here